Tuesday 28 April 2009

ஒரு வெங்காயத்தின் கதை






ஒரு வெங்காயத்தின் கதை


ஒரு ஊர்ல.. ஒரு வெங்காயம், தக்காளி, ice cream அப்படின்னு மூன்று நண்பர்கள் இருந்தாங்களாம்.

ஒரு நாள் மூவரும் கடற்கரைக்குப் போனாங்களாம். அப்ப சொல்ல சொல்லக் கேக்காம ice cream, தண்ணீருக்குப் போய் கரைஞ்சிப் போச்சாம்.


தக்காளியும் வெங்காயமும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வரும் வழியில் லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.

உடனே வெங்காயம் அழுதுக்கிட்டே கடவுள் கிட்ட வேண்டிக்கிச்சாம். " ice cream செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்போ தக்காளி செத்தப்ப நான் அழுதேன்.. ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா? ன்னு கேட்டுச்சாம். 

அதற்கு கடவுள், "சரி இனிமே நீ சாகும் போது பக்கத்துல இருக்குற எல்லாருமே அழுவாங்க" ன்னு சொன்னாராம். அதனால் தான் வெங்காயம் நறுக்கும்போதெல்லாம் நாம் அழறோம்:))) --~--~---------~--~----~- "தமிழ் பிரவாகம்" thanks to viji.




Tuesday 21 April 2009

ஆள வந்தான்



ஆள வந்தான் படத்துல கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைனு ஒரு பாட்டு வரும்.

அதை நான், நீங்கள் மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து பாடுனா எப்படி பாடுவோம். இப்படிதான் பாடுவோம்.

தமிழ் பாதி,   ENGLISH பாதி கலந்து செய்த கலவை நான்.

ENGLISH கொன்று   ENGLISH கொன்று தமிழை வளர்க்கப் பார்க்கின்றேன். 

ஆனால் தமிழை ஒன்று உணவாய் தின்று ENGLISH  மட்டும் வளர்கின்றதே!.




சரி நம்ப கலைஞர் பாடுனா எப்படி இருக்கும்.

குடும்பம் பாதி. அரசியல் பாதி கலந்து செய்த கலவை நான்.

குடும்பம் கொன்று குடும்பம் கொன்று அரசியல் வளர்க்கப் பார்க்கின்றேன். ஆனால்

அரசியலை ஒன்று உணவாய் தின்று குடும்பம் மட்டும் வளர்கின்றதே!.






வில்லு பட effectஅப்புறம் நம்ப விஜய் இப்படி தான் பாடுவாரு.

ஹிட்டு பாதி, பிலாப்பு பாதி கலந்து செய்த கலவை நான்.

பிலாப்பைக் கொன்று பிலாப்பைக் கொன்று ஹிட்டை வளர்க்கப் பார்க்கின்றேன்.

ஹிட்டை ஒன்று உணவாய் தின்று பிலாப்பு மட்டும் வளர்கின்றதே!.





சரி கடைசியா மேட்டருக்கு வாரேன். நம்ப மொக்கை பதிவு மன்னர்கள் பாடுனா எப்படி இருக்கும்.

உருப்படியாப் பாதி மொக்கையாப் பாதி கலந்து செய்த கலவை நான்.

மொக்கை கொன்று மொக்கை கொன்று உருப்படியா எழுதப் பார்க்கின்றேன். 

ஆனால் உருப்படியானதை ஒன்று உணவாய்த் தின்று மொக்கை மட்டும் வளர்கின்றதே...

 

Thursday 2 April 2009

ஹாய் பிரண்ட்ஸ்.

ஹாய் பிரண்ட்ஸ்.

வரலாற்றுல என் பெயர் விடுபட்டுப் போகக்கூடாதுங்கற ஒரே காரணத்துக்காக உருவானதே இந்த பிளாக்